லகலகலக - Analysis of Original Risk Analysis
பிளஸ் பாயிண்ட்
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு (சொந்த தயாரிப்புனா பல பிரச்சினைகள் வருமே) --- 2%
ஏற்கனவே இரண்டு மொழிகளில் மெகா ஹிட்டான மகா பாதுகாப்பான கதை - 5%
அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது --- 0%
சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது --- 0.5%
சமரசத்திற்காக அரசியலை தாக்கும் வசனங்களை வைக்காமல் பாதுகாப்பான வசனங்கள் வைத்தது --- 0.5%
சமரசத்திற்காக ஸ்டைலாக புகை பிடிக்கும், தண்ணியடிக்கும் காட்சிகள் வைக்காதது --- 5% (ரசிகர்கள் நலனை மனதில் வைத்ததால் !)
20 வயது கதாநாயகி --- 2%
ஜோதிகாவின் முட்டை கண் மற்றும் நடிப்பு --- 6%
நகைச்சுவை புயல் --- 4%
நாயகனுக்காக கதை என்பதை கதைக்காக நாயகன் என்ற வியூகம் --- 2%
திரைவெளிச்சத்திலே தலைவனைத் தேடும் தமிழர்கள் --- 0.5%
சிலர் துர்நாற்றம் மிக்க இடங்களில்(!) தலைவனைத் தேடுகிறார்கள். ஜனநாயகத்தில் தலைவனை எங்கு வேண்டுமானாலும் தேடிக் கண்டுபிடிக்க / தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை உண்டு தானே!!
நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள் --- 0%
மிக நிச்சயமாக, நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தவர்களாகவே தமிழர்களை கருதுகிறேன் ! நிசத்தில் சிலர் அடிக்கும் கோமாளித்தனங்களையும், லூட்டியையும் கண்டு நொந்து நூலாகி, நிழலில் சற்று நேரம் அதை மறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள் !!! அதில், தவறொன்றும் இல்லை.
மற்றும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் --- நூறிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ளவைகளின் சதவிகிதங்களை கழித்துப் பார்த்தால் சுலபமாக கண்டுபிடித்து விடலாமே :) எங்கே, கணித்துச் சொல்லுங்க, பார்க்கலாம்! ரஜினியின் 'பிளஸ் பாயிண்ட் சதவிகித மதிப்பை' முதலில் பின்னூட்டுபவருக்கு, ஒரு பரிசு காத்திருக்கிறது :)
மைனஸ் பாயிண்ட்
படத்தை ஹிட் ஆக்கியே தீரவெண்டுமென புகுத்தப்பட்ட இரட்டை அர்த்த நகைச்சுவைகள்
---- சரி தான்! (என் மனைவியும் இதை மைனஸ் பாயிண்டாக குறிப்பிட்டார், so accepted ;-))))) ஆனால், அதற்கும் ஹிட்டுக்கும் சம்மந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.
மற்றவைகள் பல பதிவுகளில் விமர்சிக்கப்பட்டு விட்டது
கோபி என் பதிவில் பின்னூட்டியது, உங்களுக்காக, REPEAT .....
*****************************
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் (1933 முதல் 2005 வரை) உலகம் முழுதும் 156 திரையரங்குகளில் 100வது நாள்.
தனது சாதனையை தானே தகர்த்துள்ளார் ரஜினி ( முந்தய சாதனை படையப்பா 139 திரையரங்குகளில் 100வது நாள்)
ஆனால் ஒரு திரைப்படத்தை ரசிகர்களால் மட்டுமே 100 நாட்கள் கடந்து ஓட்ட முடியாது. பொது மக்களும் Repeated Audience என்று சொல்லக் கூடிய சாதாரண மக்களும்தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
********************************
பின்குறிப்பு:
சை... கடைசியில் என்னையும் 'லகலகலக' பற்றி analysis பண்ண வைத்து விட்டார்களே .... தேவுடா, தேவுடா ....
இப்பதிவின் trend-ஐ பின்பற்றி இன்னும் சிலர் பிளஸ் பாயிண்ட்டுகளுக்கு தப்பு தப்பாக(!) சதவிகித மதிப்பு போடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது ;-)
என்றென்றும் அன்புடன்
பாலா
5 மறுமொழிகள்:
ஆப்தமித்ராவும், மணிசித்திரதாழும் அந்தந்த மொழிகளிள் ஊத்திக்கொண்டு சந்திரமுகி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் சொல்வது போல ரஜினிக்காக மட்டுமே படம் ஓடியது என எடுத்துக்கொள்ளலாம்...
ரஜினிக்காக மட்டுமே படம் ஓடியது என்றால் நீங்கள் சொன்ன விழுக்காடு படி சந்திரமுகியின் வசூலில் குறைந்த 68%த்தை பாபா பெற்றிருக்க வேண்டும்....
பொதுமக்களே மேற்சொன்ன இரண்டு கருத்துக்களையும் பரிசீலித்து சதவீத கணக்கை நடுநிலையோடு போட்டு பாருங்கள், கூட்டி கழிச்சி பாருங்க சொன்ன கணக்கு சரியாக வருகின்றதா என!
//கோபி என் பதிவில் பின்னூட்டியது, உங்களுக்காக, REPEAT .....//
குறிப்பு: இது தமிழ் சந்திரமுகியின் சாதனை விவரங்கள் மட்டுமே.
இது தவிர தெலுங்கிலும் இன்னபிற மொழிகளிலும் சந்திரமுகி 100 நாட்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
//ஆப்தமித்ராவும், மணிசித்திரதாழும் அந்தந்த மொழிகளிள் ஊத்திக்கொண்டு சந்திரமுகி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் சொல்வது போல ரஜினிக்காக மட்டுமே படம் ஓடியது என எடுத்துக்கொள்ளலாம்...//
குழலி.. ஆப்த மித்ரா, மணிசித்ரதாழு எல்லாம் ஓடி முடிஞ்சிடுச்சிங்க. சந்திரமுகி மற்ற மொழிகளில் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. ஓடி முடிஞ்சப்புறம் சாதனைகளை ஒப்பீடு செய்யலாம்.
//ஆப்தமித்ராவும், மணிசித்திரதாழும் அந்தந்த மொழிகளிள் ஊத்திக்கொண்டு சந்திரமுகி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள்
சொல்வது போல ரஜினிக்காக மட்டுமே படம் ஓடியது என எடுத்துக்கொள்ளலாம்...
//ஆப்தமித்ராவும், மணிசித்திரதாழும் வெற்றிப் படங்கள் தான் ! யார் இல்லை என்று சொன்னார்கள் ? நான் சொல்ல வந்தது, சந்திரமுகி, ரஜினி நடித்ததால், அப்படங்களை விட பல ..... மடங்கு வெற்றி பெற்றுள்ளது என்ற கருத்தையே !!!!!!
மேலும், BABA is just an Aberration !!! அதன் தோல்விக்கும், ரஜினியின் அப்போதைய பா.ம.க/ராமதாஸ் எதிர்ப்புக்கும் ஒரு
சம்மந்தமும் கிடையாது, சிலர் சொல்வது போல !!!! ரஜினி திரைப்படங்களின் வெற்றி ரசிகர்களாலும், பொது மக்களாலும்
நிர்ணயிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளால் அல்ல என்பதை புரிந்து கொள்வது மிக அவசியம் !!!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
/////சை... கடைசியில் என்னையும் 'லகலகலக' பற்றி analysis பண்ண வைத்து விட்டார்களே .... தேவுடா, /தேவுடா ....//////
ஏங்க பாலா , ரஜினி படம் பற்றீ ரிஸ்க் அனாலிஸிஸ் எழுதுவது அவ்வளவு மோசமான விஷயமா?? ஏன் இப்படி சலிச்சுகறீங்க???
எங்கே நம்ம ராம்கி, மாயவரத்தான் ராஜா ராமதாஸ்..
அப்பாடா ..வேலை முடிஞ்சது !! :)
நாராயனா , நாராயனா
வீ எம்
VM ennum nArathA,
ithu enna viLaiyAttu ;-)
ராம்கி, மாயவரத்தான் ராஜா ராமதாஸ்..
ennai piyththu vituvArkaL :)
Post a Comment